பாண் பக்கற்றுக்களுக்குள் எலியின் உடற்பாகங்கள்

ஜப்பானில் பாண் பக்கற்றுக்கள் இரண்டினுள் எலியின் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, உடனடியாக 100,000க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அதேவேளை சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் உணவுகளை திரும்பப் பெறுவது அரிதான ஒரு விடயமாகும்.

பாஸ்கோ ஷிகிஷிமா நிறுவனம்
இச்சம்பவம் தொடர்பில் பாண் தயாரிப்பு செய்யும் பாஸ்கோ ஷிகிஷிமா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, “பாண் பொதிக்குள் எவ்வாறு எலியின் உடற் பாகங்கள் ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருகிறோம்

ஜப்பானிய காலை உணவுகளில் பிரதான இடத்தை பிடித்துள்ள வெள்ளை சோஜுகு பாணை உட்கொண்டு யாரும் நோய்வாய்ப்பட்டதாக இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமைக்காக நாங்கள் மன்னிப்பு கோர விரும்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாஸ்கோ பாண் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரண்டு பாண் பொதிக்குள் கருப்பு எலியின் பாகங்கள் காணப்பட்டதை நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.