யாழில் போதைப் பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது

பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்
இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டன. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவளைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவத்த்ம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் தப்பியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது