தமிழர் பகுதியில் தவறான முடிவால் உயிரிழந்த மாணவி!

திருகோணமலை – உப்புவெளி, தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (14-05-2024) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் 17 வயதான கோணேஸ் துசானி என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்று காலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.