யாழ். மருத்துவ பீடத்தில் கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (2024.05.16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டு வருகிறது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.