பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் விபரீத முடிவெடுத்த தந்தை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஐயாத்துரை தியாகராஜா என்ற முதியவரே இவ்வாறு இன்றையதினம் (6-05-2024) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மன விரக்தியடைந்த அவர் இன்று அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.