யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.