யாழில் குடும்ப சண்டையால் பறிபோன உயிர்!

  யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சம்பவத்தில் வரதராசா நியூட்சன் (23) என்பவரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வைத்தியசாலையில் சிகிச்சை

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (23) உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் அக்காவின் கணவருக்கும்- இளைஞனின் தந்தைக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் மீது, அக்காவின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இளைஞனின் தந்தை மீதும் தலைக்கவசத்தால் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து, அக்காவின் கணவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்ததுடன் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.