போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

களுத்துறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பாணந்துறை வலப்பன பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 850 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.