கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு!

வெல்லாவெளி, மண்டூர் பிரதேசத்தில் வெல்லாவெளி களுபாலமவிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு குழுவால் அல்லது தனி நபரால் உயிரிழந்தவரின் தலையில் அடித்து கிணற்றில் வீசப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.