யாழில் மின்சார சபைக்கு விபூதி அடித்த இராணுவம்!

 யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர் .

 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிலுவை  

இந்நிலையில் அங்கு சுமார் நான்கு ஆண்டுகாலமாக முகாமிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாத நிலையில் , நிலவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் .

வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கூறுகையில்,

இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தங்கியிருந்தனர் . அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும்” என்றார்.