காவி உடையில் வைரலாகும் மோடி!

    காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தி பிரதமர் மோடி தியானம் செய்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

அதேவேளை கடந்த 2019 தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் இதேபோன்ற தியானப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.