உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே தவறான முடிவை எடுத்துள்ளார்.

விபரீத முடிவு
குறித்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவனுக்கு ஒரு திறமைச் சித்தி (C) மற்றும் இரண்டு சாதாரண சித்திகள் (S) கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பரீட்சைப் பெறுபேற்றினை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.