பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட இராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விடேச குணங்கள்,திறமைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பிறப்பிலேயே எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் இருக்கும். இவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் முக்கிய விடயங்களை முன்கூட்டியே அறியும் அபார ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி எதிர்காலம் குறித்து முன்னரே தெரிந்துக்கொள்ளும் சக்தி படைத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகின்றார்கள் இதனால் அவர்களுக்கு இயல்பாகவே உணர்திறன் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு எல்லா சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்திக்கும் திறமை காணப்படுகின்றது. இந்த தீவிர சிந்தனையின் வெளிப்பாடாக இவர்களுக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. அதாவது இவர்கள் ஒரு விடயம் இப்படி தான் நடக்கும் என நினைத்தால் அது அப்படியே நிஜத்தில் நடக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மீனம்

மீனம் ராசியில் பிறந்தவர்கள் கற்பனை மற்றும் உள்ளுணர்வின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள்.இவர்களுக்கு இயல்பிலேயே கற்பனை செய்யும் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். அவர்கள் வாழ்வில் பாதி நாட்களை கற்பனை உலகிலேயே வாழ்ந்துவிடுகின்றார்கள்.அவர்கள் கற்பனை செய்யும் எதிர்கால வாழ்க்கை பெரும்பாலும் நிஜத்தில் நடக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சக்தி மற்றும் மீளுருவாக்கத்துடன் தொடர்ப கொண்ட புளூட்டோ கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். புளூட்டோ அமானுஷ்யத்தையும், ரகசியங்களையும் ஆளுகிறது, இவர்களுக்கு மறு பிறவி குறித்து அறியும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை உள்ளுணர்வின் சக்தி மூலம் முன்கூட்டியே அறிந்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் நீதி மற்றும் ஒழுக்த்தின் கிரகமான சனியால் ஆளப்படுகின்றார்கள். இவர்களுக்கு இயல்பிலேயே தங்களின் விதியை மாற்றியமைக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. தங்களின் வாழ்க்கையை பெரும்பாலும் இவர்களே வடிவமைக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தளவிற்கு இவர்களின் எண்ணங்கள் சக்தி கொண்டவையாக இருக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை இவர்கள் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றார்கள்.