15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞர்!

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த சிறுமியை காதலித்த நிலையில் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

காதல் தொடர்பு

இதனையடுத்து இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுமியை யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று பின்னர் வெள்ளப்பள்ளத்திற்கு சிறுமியினை வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.