யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், கோயிலில் பெருந்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பொலிஸார் பரிசோதனை செய்ததில் குறித்த திருடனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்