திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இருவரும் இளையராஜாவை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிரேம்ஜி
கங்கை அமரனின் மகனான பிரேம்ஜிக்கு கடந்த 9ம் தேதி திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு முன்னிலையில் குறித்த திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்திலிருந்து யாரும் வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கங்கை அமரன் மற்றும் இளையராஜா இருவருக்கும் குடும்ப சண்டை காரணமாக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது.

ஆனால் இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது புகைப்படம் வெளியாகியுள்ளது. இளையராஜா அன்றைய தினத்தில் வேறு ஒரு இசை பணியில் ஈடுபட்ட நிலையில் அவரால் வர முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறிய நிலையில், திருத்தணியில் நடைபெற்ற திருமணத்தில் அவர் பங்கேற்கவில்லை என கூறுகின்றனர்.

மணமக்களை வாழ்த்திய இளையராஜா
இந்நிலையில், இளையராஜாவிடம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து வாழ்த்து பெற்ற புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இளையராஜாவுக்கும் அவரது தம்பி கங்கை அமரன் குடும்பத்துக்கும் எந்த ஒரு சண்டையும் பிரச்சனையும் இல்லை எனக் கூறுகின்றனர்.

பிரேம்ஜி குறித்த பெண்ணை லாக்டவுன் காலத்தில் காதலித்து வந்தார், இருவரும் கடந்த ஒருவருடமாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.