இலங்கையில் பகல் கொள்ளையர்களால் அச்சத்தில் மக்கள்!

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் நேற்று (15) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த கடையின் பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி, போத்தல் போன்ற ஒன்றைக் காட்டி பெண் ஊழியரை பயமுறுத்தியுள்ளனர்.

தப்பிச் சென்ற கொள்ளையர்
இந் நிலையில், உடனடியாக அங்கிருந்த மற்றைய பெண் ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கான அறிவிப்பு மணியை அடித்துள்ளனர்.

பின்னர் இரண்டு கொள்ளையர்களும் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுமுல்ல பொலிஸாரும் மொரட்டுவ பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பகலில் இவ்வாறன கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.