திருமணபந்தத்தில் இணைந்து கொள்ள போகும் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி

பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

2016ஆம் ஆண்டு வெளிவந்த அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு வாழ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், அந்த படங்களின் அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

திருமணம் 

இந்த நிலையில், பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆம், தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது என கூறி தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பிரதீப் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..