இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கைது!

   இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு இலங்கையர் மீது தாக்குதல்
இதன்போது மற்றுமொரு இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலியின் கராபினியேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (15) மாலை ஒருவர் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரை பொலிஸார் பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.