பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது!

கண்டி – மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற போர்வையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​இவ்வாறு மோசடி செய்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் 2மில்லியன் ரூபா என பொலிஸார் கூறியுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை

இந்த மோசடி நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.