மன்னாரில் குடும்பத் தகறாரால் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

மன்னார் (Mannar) மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.06.2024) பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.