மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் மரக்கறிகளின் விலை நேற்றையதினம் (18-06-2024) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேலியகொடை – மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், கெரட் ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும், வெண்டைக்காய் ஒரு கிலோகிராம் 500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.