நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

 இலங்கையில்  நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில்  இலங்கையில்  தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.06.20) சற்று அதிகரித்து கொண்டே வருகின்றது.

இன்றைய தங்க நிலவரம்

அந்தவகையில்  இலங்கை  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 713,906 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,190 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,100 ரூபாவாகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,050 ரூபாவாகவும் அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 176,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.