யாழில் மனைவியை தீ மூட்டி கொன்றவருக்கு மரண தண்டனை விதிப்பு!

  யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையிர் உயிரிழந்துள்ளார்.

 தீ மூட்டி எரிப்பு

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் கணவனை கைது செய்து யாழ். நீதாவன் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நேற்றைய தினம் (19) புதன்கிழமை வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனை மன்று குற்றவாளியாக கண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.