சிம் கார்ட்களை பயன்படுத்தி பல மில்லியன் மோசடி!

பிறரது தொலைபேசி சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேகநபரை ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஹட்டனைச் சேர்ந்த மொஹான் தயாளன், குற்றப் புலனாய்வு பிரிவின் சைபர் குற்றவியல் கண்காணிப்பு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மோசடி

பாதிக்கப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி பல்வேறு சிம் அட்டை வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரால் மோசடி செய்யப்பட்ட உண்மையான தொகையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான் திலின கமகே, விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்காக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, ஏ.ஏ.எல் ஜயரத்ன ராஜா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.