பிரித்தானிய பிரதமரின் பாதுகாவலர் கைது!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig Williams) என்பவரே தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸில் முறைப்பாடு

குறித்த அதிகாரி தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் திகதி குறித்து 100 பவுண்டுகள் பந்தயம் கட்டியுள்ளார்.

இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, வில்லியம் குறித்து பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.