விடிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

  புத்தளம் – மதுரங்குளி சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இளம் பெண்ணின் சடலமொன்று இன்று (21) காலை மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீரகம பகுதி தென்னைத் தோட்டமொன்றில் வசித்து வந்த 26 வயதான பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த இளம் பெண், மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து, கணவர் தனது மனைவியை தேடியுள்ளார் .

இதன்போது பெண் இருந்த தோட்டத்திற்கு முன்னால் உள்ள வீதியில் காணப்பட்ட வெள்ளநீருக்குள் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக பொலிஸார் குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பிரசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.