பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்

பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகையை போக்குவரத்து துறை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கரீம் நகர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும், குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தயடுத்து தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பாக காவு வண்டி மூலம் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு துணிச்சலாக பிரசவம் பார்த்த ஆந்திர போக்குவரத்து பெண் ஊழியர்களுக்கு மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும், பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.