வங்கி முன்பாக இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில்  நேற்று (23) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்  5 அடி  4 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.