வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை!

பிரித்தானிய (UK) விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அங்கு ஏற்பட்ட மின் தடை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் (Manchester) விமான நிலையத்தில் நேற்று (23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் இதனால் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

தரையிறங்க வேண்டிய விமானங்கள்
அத்துடன் குறித்த விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவுள்ள பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தர முடியும் எனவும் கூறப்பட்டடிருந்தது.

எனினும், காத்திருக்கும் பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அப்போது தான் நெரிசலை தடுக்க முடியும் எனவும் விமான நிலையம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.