யாழில் வாள்வெட்டு தாக்குதல்!

 யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபரொருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தூக்கத்தில் இருந்த தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவத்தில் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.