நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!

கொட்டுகொட- போலந்த பகுதியில் அத்தனகல்ல ஓயாவில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஜா-எல பகுதியை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டான பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவன் நேற்று மேலும் இரு மாணவர்களுடன் அத்தனகல்ல ஓயாவிற்கு நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக மற்ற இரு மாணவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.