தென்னிலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30 வெளிநாட்டவர்கள் கைது!

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 வெளிநாட்டவர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட10 கணனிகள்

கொச்சிக்கடி பல்லம்சேனை மற்றும் பலகத்துரே ஆகிய இரண்டு விருந்தினர் விடுதிகளில் தங்கியிருந்து இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 10 கணனிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.