போலி  நாணயத்தாள்களுடன் கைதான சிறுவன்!

அநுராதபுரம் பிரதேசத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தம்புத்தேகம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் போலி நாணயத்தாள்களுடன் சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

500 ரூபா போலி நாணயத்தாள்கள்
அநுராதபுரம், நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபா போலி நாணயத்தாள்கள் ஆறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரின் வீட்டிலிருந்து போலி நாணயத்தாள்கள் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.