ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

   இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ,

காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் போட்டியின்றி ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

18-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

காங்கிரஸ் அங்கம் வகித்த இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான கூட்டணியாக மக்களவையில் உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.