இலங்கை அரசாங்கத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

இலங்கை அரசாங்கத்தின் அலட்சியத்தால் இலங்கை கடல் எல்லையை பாதுகாக்கும் ஒரு கடற்படை வீரர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றையதினம் (26.06.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.

இந்திய மத்திய அரசுக்கு இலங்கையின் ஆதரவு பெருவாரியாக தேவைப்படுகின்றது. அதேவேளை, அந்த ஆதரவை கொடுக்கின்ற தென்னிலங்கை அரசாங்கத்துக்கு இந்திய மத்திய அரசை தட்டிக்கேட்க முடியாத நிலையும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.