வெடிபொருட்களுடன் நால்வர் கைது!

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களுடன் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

01 கிலோ அமோனியாம் தூள், 550 கிராம், 116 சென்றி மீற்றர் நீளமான நூல் மற்றும் 03 டெட்டனேட்டர்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 50 மற்றும் 60 வயதுடைய மினிபே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மகாவலி கங்கையில் மீன்களை பிடிப்பதற்காக சந்தேகநபர்கள் இந்த வெடிபொருட்களை கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.