இலங்கையில் முட்டை விற்று ஹெலிகாப்டர் கொள்வனவு!

இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்று பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர், ஹெலிகாப்டர் கொள்வனவு செய்யுமளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் கருப்பு சந்தையில் முட்டைகளை விற்பனை செய்பவராக கருதக்கூடிய இவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

ஒரு முட்டை உற்பத்தி செலவு 31 ரூபாய் என்றாலும், 50-55 ரூபாய்க்கு இடையேயான விலையில் நுகர்வோரை சென்றடைகிறது.

ஹெலிகாப்டர் கொள்வனவு
அதற்கமைய, முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுகின்றனர். மேலும், முட்டை வியாபாரிகள் பெரும்பாலானோர் உற்பத்தி செய்த முட்டைகளை தனியார் இடங்களில் இருப்பு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சந்தையில் போலியான முட்டை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு முட்டை விலையை உயர்த்துவதாகவும் அரச கால்நடை துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்களை ஏமாற்றி அதிக இலாபம் ஈட்டும் முட்டை வியாபாரிகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ஹெலிகாப்டர் கொள்வனவு செய்வது தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.