தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்ப்படும் மாற்றங்கள்!

வருடம் முழுவம் நமக்கு கிடைக்கும் பப்பாளியில் இவ்வளவு நன்மைகள் இருப்பது தெரியாமலே பலர் சாப்பிடுவார்கள். இந்த பப்பாளி பழத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதயம் முதல் தோல் வரை அனைத்தையும் நன்றாக வைத்திருக்கிறது.

அவ்வாறு சாப்பிடும் போது என்னென்ன பயன் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

இதயத்தை ஆரோக்கியமாக்கும்

பப்பாளியை தினமும் தவறாமல் உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி ஆகியவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதன் விளைவாக, இதயம் ஆரோக்கியமாக உள்ளது.

செரிமானத்தை மேம்படுத்தும்
பப்பாளி பசியை அதிகரிப்பதைத் தவிர, வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும். பழுத்த பப்பாளி வாயு நெஞ்செரிச்சல் அல்லது மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

இப்போதெல்லாம் சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் கண் பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிட்டன. பழுத்த பப்பாளியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்

பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிளாவனாய்டுகள், லுடீன், கிரிப்டோக்சாந்தின் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

கூந்தலின் அழகை அதிகரிக்கும்

புளிப்பு தயிர் பப்பாளியுடன் கலந்து கூந்தலில் தடவினால் முடியின் வேர்கள் வலுவடையும். கூந்தலின் பொலிவை பராமரிப்பதுடன், பேன் பிரச்சனையும் நீங்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவும்

பப்பாளி ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக இருப்பதால், தினமும் பப்பாளியை முகத்தில் தடவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும். இது தவிர பழுத்த பப்பாளியை தேன் மற்றும் புளிப்பு தயிர் சேர்த்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் நீங்கும்.