அணித்தலைவராக ரோஹித் சர்மா படைத்த சாதனை!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அணித்தலைவராக ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவர் அபாரமாக விளையாடி 39 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரின் மிகசிறந்த துடுப்பாட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர்களில் 171 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

இந்தப் போட்டியில் 57 ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் சர்மா, இந்திய அணித்தலைவராக 5,000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 4 இந்திய அணித்தலைவர்கள் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளையும் உள்ளடக்கி அணித்தலைவர்களாக 5,000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை கடந்தனர்.

தற்போது 5ஆவதாக ரோஹித் சர்மா இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

அவர் அணித்தலைவராக 122 போட்டிகளில் 5,033 ஓட்டங்களைக் குவித்து 5ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதேவேளை விராட் கோலி 250 போட்டிகளில் விளையாடி12,883 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்திலுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் 11,000 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.