காய்ச்சல் நீடிப்பு தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் கொழும்பு நகர்ப் பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு பரவும் பிரதேசங்கள் அடையாளம்

கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவு அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் பரவலை விரைவாகக் கட்டுப்படுத்தாவிடின், சில மாதங்களில் இலங்கையில் டெங்கு தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு அறிவுறுத்தல்

மேலும், இந்த நாட்களில் சிறு பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அவர்கள் ஆரம்பம் முதலே ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.