யாழ் வாகன விபத்தில் இருவர் படுகாயம்!

யாழ்.(Jaffna) சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், நேற்று (30.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது, வைத்தியர் ஒருவர் பயணித்த காரும் பொதுமகன் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.