இந்தியாவில் மத நிகழ்வில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

புதிய இணைப்பு
இந்தியாவின் (India) உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று (02) இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாம் இணைப்பு
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 50இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிரா மத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போதே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பலர் சனநெரிசலில் கீழே வீழ்ந்து நசுக்குண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், உட்பட பலர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது