கோர விபத்திற்குள்ளான பேருந்து!

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே – கலஹிடியாவ பிரதேசத்தில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (04) காலை ஏற்பட்டுள்ளது.

தேவால சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹலவத்த பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.