பாதிரியார் மீது வாள்வெட்டு!

மாத்தளையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தளையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக பாதிரியார் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, அவர் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாதிரியார் 4 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.