உடுப்பிட்டி தேர்தல் தொகுதியையும் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,006 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,994 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 2,627 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 2,447 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியானது!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
  • சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,472 வாக்குகள்

திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னணியில்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031 வாக்குகள் (2 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,058 வாக்குகள் (1 ஆசனம்)
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,168 வாக்குகள் (1 ஆசனம்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 9,387 வாக்குகள்
  • ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 4,868 வாக்குகள்

நாடளுமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள்

புதிய இணைப்பு
2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு 65%

நுவரெலியா 68%

குருநாகல் 64%

மட்டக்களப்பு 61%

மாத்தறை 64%

புத்தளம் 56%

அனுராதபுரம் 65%

பதுளை 66%

மன்னார் – 70%

திருகோணமலை – 67%

முல்லைத்தீவு – 63

பொலனறுவை – 65%

இரத்தினபுரி – 65

காலி – 64%

தபால் வாக்கு முடிவு
22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

நான்காம் இணைப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், மதியம் 2.00 மணி நிலவரப்படி,

பதுளை – 51%

மொனராகலை – 46.6%

கேகாலை – 50%

அம்பாந்தோட்டை – 47%

நுவரெலியா – 55%

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா – 52%

களுத்துறை – 45%

கிளிநொச்சி – 46%

மன்னார் – 55%

மட்டக்களப்பு – 47%

திருகோணமலை – 51%

மொனராகலை – 47%

முன்றாம் இணைப்பு
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் கீழே உள்ளது.

கொழும்பு – 54%

வன்னி – 46%

இரத்தினபுரி – 40%

யாழ்ப்பாணம் – 36%

காலி – 24%

பதுளை 48%

மொனராகலை 44%

நுவரெலியா 50%

திகாமடுல்ல 37%

தேர்தல் சட்டத்தை மீறிய பேருந்து பொலிசார் அதிரடி!

இலங்கையின் 10 நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில், தேர்தல் சட்டத்தை மீறிய மூன்று பேருந்துக்கள் அதன நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மணல்தோட்டம், ஏஜி முகாம், ஏத்தாளை, கல்பிட்டி, மாம்புரி ஆகிய இடங்களில் வசிக்கும் 25 தொடரக்கம் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாக்குச்சீட்டை கிழித்த நபர் கைது!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில், வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேற அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.

எனினும் , அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் அவர் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிப் படகுக்குள் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள்!

இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடிப் படகுடன் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பல நாள் மீன்பிடிக் கப்பலில் சுமார் 60 கிலோகிராம் போதைப்பொருள் இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைதான சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தபால் மூல வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிறைவுக்கு வந்த பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெற்றது.

பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், இன்று வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

60 வீதம் முதல் 65 வீதமான வாக்குப் பதிவுகள்

வாக்களிப்பு நிலையங்கள் யாவும் மூடப்பட்டு, வாக்கெண்ணும் நிலையங்கள் திறக்கப்பட்டன. வாக்கெண்ணும் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, மாலை 4.30க்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 60 வீதம் முதல் 65 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடக பிரிவில் திருட்டு!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) புகைப்படக் கலைஞர் ஒருவர் தனக்கு PMD இன் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் அழைப்புகள் வருவதாகக் அளித்த முறைப்பாட்டையடுத்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக கூறப்பட்டதையடுத்து இம்முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், பிரிவின் வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவ்வாறு பல கருவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்த உள் தணிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தகவல்களை குறித்த புகைப்படக் கலைஞரே பொலிஸாருக்கு வழங்குவதாக கூறி முன்னாள் பணிப்பாளர் நாயகம் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுப்பதாக புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.