6 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிரதமர் சாதனை!

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 லட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளுமன்ற தேர்தலில் யாழில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் – 32,102
2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
1. சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833
   
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487

பலருக்கு சரியான பாடத்தை கற்ப்பித்த நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையின் 10ஆவது நடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில், இம்முறை இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ஸ உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது ஆசனத்தை இழந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் இதுவரை ஆட்சிசெய்து தற்போது வெளியேறிய முன்னாள் எம்.பிக்களின் விபரங்கள் பின்வருமாறு,

வெளியேறிய முன்னாள் எம்.பிக்கள்
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை

கொழும்பு மாவட்டம் – மஹரகம தொகுதி முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் மஹரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மஹரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 67,927 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,123 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,912 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,223 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3,160 வாக்குகள்

தேசிய பட்டியலை பெறுவதில் சுமந்திரன் வைத்தியரிடையே தீவிர ஆலோசனை!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தேர்தல் வெற்றி குறித்து சட்டத்தரணிகள் கடும் எச்சரிக்கை!

நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நாடாளுமற தேர்தலில் பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம்.

பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள்

தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டை நோக்கி நெருங்கிச்சென்றது,2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் மூன்றில் இரண்டை நெருங்கிச் சென்றது மூன்றில் இரண்டை பெறுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியை மாத்திரம் இந்த வெற்றியுடன் சமாந்திரம் வரையமுடியும். தேசிய மக்கள் சக்தி வடக்குகிழக்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதால் இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஐக்கியப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி விளங்க முடியும்.

இந்த தேர்தல் வெற்றி நிறைவேற்றதிகார முறையை நீக்குவேன் என்ற தனது வாக்குறுதியை ஜனாதிபதி விரைவில் நீக்குவதற்கு உதவும்.

ஜனாதிபதியாக அனுரகுமாரதிசநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடு சென்றுகொண்டிருக்கின்ற பாதை குறித்து அனேக இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,

குறிப்பாக அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம் குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி காணப்படுகின்றது. எனினும் பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஜனாதிபதியே நேற்று தெரிவித்தது போன்று அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்காக மூன்றில்இரண்டு பெரும்பான்மைகளை பயன்படுத்தியிருந்தன.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல்களை தேசிய மக்கள் சக்தி தவிர்க்கவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்..

கல்குடா தொகுதியில் வெற்றி பெற்றது தமிழரசுக் கட்சி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பு  மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 22,734 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 14,227 வாக்குகள்
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)- 12,250 வாக்குகள்
  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 11,981 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 7,350 வாக்குகள்

நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 161,167 வாக்குகள் (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 101,589 வாக்குகள் (2 ஆசனம்)
ஐக்கிய தேசிய கட்சி (UNP)- 64,672 வாக்குகள் (1 ஆசனம்)
ஐக்கிய ஜனநாயக குரல் – (UDV)- 18,606
சுயேட்சைக் குழு 06 – (IND06-06)- 6,895

கண்டி மாவட்ட கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 38,456 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 16,781 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 10,290 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,105 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 859 வாக்குகள்

மத்திய கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகின!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,160 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 27,347 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,612 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 923 வாக்குகள்
ஜனநாயக இடதுசாரி முன்னணி (DLF)- 626 வாக்குகள்