இலங்கையில் 3500ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்புக்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 73 ஆயிரத்து 31ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 839 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 26 ஆயிரத்து 725 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Previous articleதல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர், செம மாஸ்!
Next articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 986 பேர் அடையாளம்!