இலங்கைக்கு கிடைத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

இன்று காலை இலங்கைக்கு 1.5 மில்லியன் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இலங்கைக்கு 5 வகையான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கைக்கு இதுவரையில் 10,098,100 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும் 5.2 மில்லியன் தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.