யாழில் நீதிமன்ற வாசலில் வைத்து திருடிய கில்லாடித் திருடனுக்கு நேர்ந்த கெதி!

நீதிமன்ற வாசலிலேயே திருடியவர் வாளுடன் கைது! யாழ்.மல்லாகம் பகுதியில் இன்று காலை
சம்பவம், பெறுமதியான பல பொருட்கள் மீட்பு..

நீதிமன்றுக்கு சென்றவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை திருடிய நபர்
திருட்டு பொருட்கள் மற்றும் வாளுடன் பொலிஸரிடம் சிக்கியுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியை சேர்ந்த நபரே இன்றைய தினம் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டிருக்கின்றார்.

Advertisement

அண்மையில் மல்லாகம் நீதிமன்றுக்கு சென்றிருந்த நபர் ஒருவர் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின்
சேமிக்கு அழைக்குள் தனது 3 தொலைபேசிகளையும் வைத்து பூட்டிவிட்டு நீதிமன்றுக்குள் சென்றுள்ளார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளே திருடப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் இன்றைய தினம்
சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் திருட்டுபோன மோட்டார் சைக்கிள், 4 துவிச்சக்கர வண்டிகள், 3
தொலைபேகசிகள் ஆகியன மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட நகைகயை வாங்கி வைத்திருந்த சுன்னாகம் – மயிலங்காடு பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.